பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சலால் மாணவி மரணம் அடைந்துள்ளார்.

அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகப் பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.