பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து முழுநாள் விவாதம் நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.
பிரேரணை தொடர்பான கோரிக்கையினை பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமும், சபாநாயகரிடத்திலும் கடந்த மாதம் 23ஆம் திகதி தாம் முன்வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையாக முன்வைக்கப்பட்டு அன்றைய தினம் பாராளுமன்றில் முழுநாள் விவாதமாக இடம்பெறும்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, நிலஅபகரிப்புக்கு எதிர்ப்பு , மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடயங்களை அன்றைய தினம் சபையில் வலியுறுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.
