வெளிவிவகார அமைச்சு - படம்: ஊடகம்
காசாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
காசாவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிப்பதுடன், காசா மக்களை மேலும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதுடன், நிலையான அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர உரையாடல் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
