சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருவதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக சிவனடிபாத மலைக்கு (சிவனொளிபாதமலை) செல்லும் உல்லாசப் பயணிகள் தற்போதைய காலநிலையில் மலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான படிக்கட்டுகளில் அதிகளவில் மலை உச்சியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் வடிந்து வருவதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் சிவனடிபாத மலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சியத்தகங்குல ஓயாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்
அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திரு. புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்