கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்புவில் மாபெரும் மருத்துவ முகாம் பின்தங்கிய பிரதேச மக்களுக்காக இன்று (03) நடைபெற்றது.
மாகாண சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பின்தங்கிய பிரதேச மக்களுக்கான சுகாதார சேவைகளை அவர்களின் காலடிக்கு கொண்டு செல்லும் வேலை திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று மண்முனை மேற்கு பிரதேசத்தில் மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்ற இந்த மருத்துவ முகாமில் சிறப்பு வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை மற்றும் சிறுநீரகப் பரிசோதனை இரத்த பரிசோதனை சீனி மற்றும் கொழுப்பு பரிசோதனைகள்,
மாணவர்களுக்கான விசேட போசாக்கு சம்பந்தமான கற்றல் செயற்பாடுகள் மருத்துவ பரிசோதனைகள் சமூக சேவை திணைக்களத்தினால் விசேட தேவை யுடையவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் கண் பார்வையற்றவர்களுக்கான மூக்கு கண்ணாடிகள் என்பனவும் கலந்து கொண்ட அதிதிகளால் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண ஆளுநரின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சி. என். தலங்கம மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர் முரளீஸ்வரன், அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்
மட்டக்களப்புவில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றபோது மண்ன்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட 26 கிராமங்களிலும் இருந்து சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.











மட்டக்களப்பு வரதன்
