இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ்

இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படுகிறது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் விமான நிலைய வளாகத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செலுத்திச் செல்ல முடியும்.

தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதியாக செயல்படுவதாகவும், இதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், இலகுரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.

இருப்பினும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனம், மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் மட்டுமே வழங்கப்படும்.

இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்கப்பட்டாலும் கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டா என்றும் அவர் மேலும் கூறினார்.