தரம் ஐந்து முன்னோடிப் பரீட்சை

தரம் ஐந்து முன்னோடி பரீட்சை ஒன்றை மஸ்கெலியா பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

மஸ்கெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மஸ்கெலியா நகரில் உள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிலும் சுமார் ஐம்பது மாணவ மாணவிகளுக்கும் பரீட்சை நடைபெற்றது.

நேற்று முன்தினம் 31.07.2025 அன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பகுதி 1 பகுதி 2 என முன்னோடி பரீட்சை நடைபெற்றது.

இந்த முன்னோடிப் பரீட்சையை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, அப் பகுதிக்கு பொறுப்பான காவல் துறை அதிகாரி ஜீ.விக்னேஸ்ராஜா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மேலும் 320/என் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும் சமூக பாதுகாப்பு பிரிவினர் முழுமையான ஆதரவை வழங்கினர்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்