ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 இல் பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை உரிமை மீறலாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரகலய போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறிய செயலாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.