இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம்


திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவ பிரிவுக்கான உடற்பயிற்சிக்கூடம்,நோயாளர்கள் காத்திருப்பு மண்டபம் என்பன நேற்று (21) திறந்துவைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச தவிசாளர் எஸ்.சசிகுமார் வைபவ ரீதியாக இவற்றைத் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வானது திருக்கோவில் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் ஒழுங்குபடுத்தல் ஊடாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.வி. மர்சூத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயங்கி வரும் இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம், நோயாளர்கள் காத்திருப்பு மண்டபம் ஆகியவற்றுக்கான நிதி உதவியினை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சசிகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகத் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சசிகுமார் கலந்து கொண்டார்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.வி.மர்சூத், இயன் மருத்துவப் பிரிவின் இயன் மருத்துவர் கே.கரன்ராஜ், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் நிருவாகிகள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு