மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் இலாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொதுச் சொத்துச் சட்டத்தை மீறியதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவருக்கும் எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோர் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அடுத்த நீதிமன்ற தினத்தில் அவர்களை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.