பங்களாதேஷ் பாடசாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

பங்களாதேஷில் போர் விமானமொன்று இன்று பகல் பாடசாலையொன்றின் மீது வீழ்ந்து நொறுங்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக ஜமுனா தொலைக்காட்சி தெரிவித்தது.

சீனத் தயாரிப்பான F-7 BGI 701 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாடசாலை நேரம் நடந்த இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் தீக்காயங்களுடன் ஓடி வரும் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின.
இந்தச் சம்பவத்தையடுத்து நாளை தேசிய துக்க தினம் அனுட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!.

அரச, தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.