கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று ( 21) காலை 5 மணி அளவில் கேகாலை, கலிகமுவ பகுதியில் நிகழ்ந்துள்ளது.
வெரகொடவிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தும், கேகாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் 28 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

