கிண்ணியா ஜாயாவில் மாணவர் கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
திருகோணமலை – கிண்ணியா, ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும், க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்குமான கௌரவிப்பு விழா ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நேற்று (19) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும் பரக்கா சரட்டி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி முஜீப் அமீன் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.
சட்டத்தரணி முஜீப் அமீன் செய்து வரும் சமூக சேவைகளைப் பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினரால் சினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






