காவத்தை துப்பாக்கிச்சூடு: நால்வர் கைது

காவத்தை துப்பாக்கிச்சூடு: நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு எந்தானை பகுதியில் பொலிஸ் சீருடையில் சென்ற சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைசெய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம்