மட்டக்களப்புவில் 347பேர் விபத்துகளால் மரணம்

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் மட்டக்களப்புவில் 347பேர் விபத்துகளால் மரணம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இடம் பெற்ற வீதி விபத்துகளில் 347 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 9 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள தொற்றா நோய்த் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி மருத்துவர் யூ. உதயகுமார் தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களைத் தடுக்கும் செயல் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 9000 பேர் இந்த வீதி விபத்துகளில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்

மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளது. 150 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்

அதிலும் குறிப்பாக இளம் வயதினரே இந்த மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்

போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாகப் பயணிப்பதால் இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.

நமது திணைக்களத்தினால் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதை கடைப் பிடிப்பவர்கள் வீதம் குறைவாக உள்ளது.

மட்டக்களப்புவில் 347பேர் விபத்துகளால் மரணம் அடைந்திருப்பதைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் வீதி விபத்துகளைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வரதராஜன், மட்டக்களப்பு

எமது வட்சப் செனலில் இணையுங்கள்