ஜூலை 29இல் நல்லூர்க் கந்தன் கொடியேற்றம்

ஜூலை 29இல் நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் நடைபெறும் என நாடி தகவல் வெளியிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்மாகிறது.
ஓகஸ்ட் ஏழாந்திகதி மஞ்சத் திருவிழா நடைபெறும்.
ஓகஸ்ட் 21ஆம் திகதி காலை 6.15இற்கு இரதோற்சவம் நடைபெறுவதுடன் 22ஆம் திகதி காலை 6.15 இற்குத் தீர்த்தோற்சவம் நடைபெறும். அன்று மாலை 5.30 இற்கு கொடியிறக்கம் நடைபெறும்.
நல்லூர்க் கந்தன் வருடாந்த மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
