நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று

நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று ஜூலை 29ஆம் திகதி நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்மாகிறது.

ஓகஸ்ட் ஏழாந்திகதி மஞ்சத் திருவிழா நடைபெறும்.

ஓகஸ்ட் 21ஆம் திகதி காலை 6.15இற்கு இரதோற்சவம் நடைபெறுவதுடன் 22ஆம் திகதி காலை 6.15 இற்குத் தீர்த்தோற்சவம் நடைபெறும். அன்று மாலை 5.30 இற்கு கொடியிறக்கம் நடைபெறும்.

நல்லூர்க் கந்தன் வருடாந்த மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

ஜூலை 29இல் நல்லூர்க் கந்தன் கொடியேற்றம்