ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரோமனின் பதவி நீக்கத்தையடுத்து வார இறுதியில் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன. யுக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் நூற்றுக் கணக்கான விமானங்கள் சேவையில் ஈடுபடவில்லை.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை!