சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி

நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற இந்தச் சிறுவர்கள் இன்று பாடசாலை முடிந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதுர்.
மதிய உணவு எடுத்துக்கொண்டதன் பின்னர் இவர்கள் நீராடச் சென்றதாகவும் அப்போது இருவர் நீரில் மூழகியதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் பத்து வயர் நிரம்பிய சிறுவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
