வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள்

வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவர் உயிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு வாகரை- பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.
மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் துயர சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.
