கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு

வத்தளையில் இன்று நீர் வெட்டு 12 மணித்தியாலம் அமல்படுத்தப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று (ஜூலை 07) காலை 8.30 முதல் இரவு 8.30 வரை, நீர் விநியோகம் 12 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக துண்டிக்கப்படும் எனத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இத்துண்டிப்பு, இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் இயக்கப்படும் நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, மினுவங்கொடை,கம்பஹா பிரதேச சபையின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

பொதுமக்கள் தேவையான அளவிலான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு நீர் வழங்கல் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு