வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 24ஆக உயர்வு

டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 24ஆக உயர்வு அடைந்துள்ளது. மேலும் 25 பேர் காணாமற்போயுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்து, மேலும் 20இற்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் ஆரம்பத்தில் தெரிவித்தன.

டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது..

இந்த அனர்த்தத்தில் மீட்பு பணிக்காக 14 உலங்கு வானூர்திகளும், 12 ட்ரோன்கள் ஒன்பது மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் முடிந்தவரை அரச அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா?

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025