இன்று இடைக்கிடை மழை பெய்யும்

இன்று இடைக்கிடை மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்பிரகமுவை, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.
மத்திய மலைப்பகுதியிலிருந்து மேற்குத் தொடர்ச்சிப் பகுதியிலும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
