விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய 40ஆயிரம் லீற்றர் எரிபொருள் பவுசர்

விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய 40ஆயிரம் லீற்றர் எரிபொருள் பவுசர்

மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

காயமுற்ற பெண் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்குள்ளானது

40 ஆயிரம் லிட்டர் எரி பொருளுடன் பயணித்த இந்த பாவுசர் சம்பவ இடத்தில் புரண்டு விபத்து ஏற்பட்டிருந்தால் மட்டு நகரில் இன்று பாரிய ஓர் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் எரிபொருள் பவுசரை அவ்விடத்தில் இருந்து அகற்றியதுடன் ஏற்பட்ட விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025