போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து

போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து

போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போரா மாநாட்டையொடடி கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாடு 25 மற்றும் 27 முதல் ஜூலை 05 வரை நடைபெறுகிறது.

அதற்கமைய இந்த நாள்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேபோல் 27 முதல் ஜூலை 05 வரை காலை 07:00 மணிமுதல் மற்பகல் 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் மாநாடு நடைபெறுகிறது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள கிளென் ஆபர் திசைக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, காலி வீதியிலிருந்து கிளென் ஆபர் பகுதிக்கு நுழைந்து கடற்கரை வீதிக்கு போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025