நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும்

இன்றும் கனத்த மழை பெய்யும்

நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் பலமுறை மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசும் பலமான காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025