வினாத்தாளில் வியாபாரம் செய்யும் கல்விப் பணிப்பாளர்

வினாத்தாளில் வியாபாரம் செய்யும் கல்விப் பணிப்பாளர்

பரீட்சை வினாத்தாளில் வியாபாரம் செய்யும் கல்விப் பணிப்பாளர் ஒருவர் பற்றிய தகவல் கண்டிஎலியா மாவட்டத்தின் தொப்பித்தோட்டம் நகரத்தில் உலாவுகிறது.

கோட்டக் கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றும் இந்தக் குறிஞ்சிக் கடவுளான சிவமைந்தன், அதிபர் ஆசிரியர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு காரியம் ஆற்றுவதாகச் சொல்கிறார்கள்.

மாகாணத் திணைக்களத்திற்கு வரும் பரீட்சை வினாத்தாள்களை எப்படியோ சுட்டுவிடும் இந்தச் சிவமைந்தன், அவற்றைக் கொண்டு பல வினாத்தாள்களைச் சுட்டுச் சுடச்சுட விற்பனை செய்துவிடுவார்.

இவரின் இந்த வினாத்தாள் வியாபாரத்திற்குத் துணைபோகும் அதிபர், ஆசிரியர்களுக்கு வேண்டிய சலுகைகளையும் பெற்றுக்கொடுக்கிறார். மறுக்கின்ற பல திறமையான அப்பாவி ஆசிரியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் நிலை ஏறபட்டிருக்கிறது.

இப்படியே தொடர்ந்தால், இன்னும் ஓரிரு வருடங்களில் தொப்பித்தோட்டம் நகரத்தின் கல்வி நிலைக்குத் தொப்பிதான் என்கிறார்கள் சமூக ஆர்வமுள்ள ஆசிரியர்கள்.

தரம் ஐந்து பரீட்சையில் புலமையோ, சாதாரண தரப் பரீட்சையில் சாதாரண அறிவோ இல்லாத இந்தச் சிவமைந்தன், உதவிப் பணிப்பாளராக இருக்கும் ஒரே தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார்!

ஆகவே. இவரின் போலியான வினாத்தாள் வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தோட்டப்புறத்தின் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டியது கோட்டக் கல்விப் பணிமனையின் பொறுப்பன்றோ?

வினாத்தாளில் வியாபாரம் செய்யும் கல்விப் பணிப்பாளர் பற்றியும் இவ்வாறு வெளிவராது இலைக்குள் மறைந்து கிடக்கும் காய்கள் பற்றியும் எமக்கு அறியத்தாருங்கள்.

பவர்புள் பரமசிவம் – mathemurasu@gmail.com

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025