ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு

ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு

ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதுபற்றி ஆராயப்பட்டு வருகிறது.

ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தில் வேலையிழக்கும் ஊழியர்களுக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஏற்புடைய வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து என்டியுசி ஆராய்ந்து வருவதாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைத் தனது தளமாகக் கொண்டுள்ள ஜெட்ஸ்டார் ஏஷியா விமான சேவை நிறுவனம் ஜூலை 31ஆம் திகதி மூடப்பட உள்ளதால் 500இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்க உள்ளனர்.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து ஆணையத்துடனும் சாங்கி விமான நிலையக் குழுமத்துடனும் இணைந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் திரு இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

“ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் மூடப்படுவது பல ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த விமான சேவை நிறுவனத்துக்குப் பல்லாண்டு காலமாக நிறைவான சேவையை வழங்கியுள்ளனர்,” என்று திரு இங் கூறியதாகத் தமிழ்முரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில், என்டியுசியின் சிங்கப்பூர் கைத்தொழிலாளர், வணிகத் தொழிலாளர் சங்கத்துக்கு முன்கூட்டியே தகவல் தரப்பட்டதாகக் கூறிய திரு இங், ஊழியர்களுக்கு உதவ சங்கம் ஜெட்ஸ்டார் ஏஷியாவுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025