விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு

பெங்களூரு வெற்றிவிழா அனர்த்தம் தொடர்பாகக் கிரிக்ட் வீரர் விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாலாந்திகதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் 11பேர் உயிரிழந்தனர். இதுபற்றி சமூக செயற்பாட்டாளர் எச். எம். வெங்கடேஷ் கோழியைக் கைதுசெய்ய வேண்டும் என்று பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளார்.
விராட் கோலி ஐபிஎல் ஊடாக சூதாட்டத்தை ஊக்குவித்ததாக வெங்கடேஷ் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாட்டைப் பரிசீலிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், கோழிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கிப் 11 பேர் உயிரழந்த சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்சிபீ அணியின் முகாமையாளர் உள்ளிட்ட நால்வரும் 14 நாள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜீவிதன் – மதிமுரசு
