பெங்களூருவில் நடந்த வெற்றிவிழாக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபீ அணியின் உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையாவின் உத்தரவுக்கமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று கைதானவர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் அதிகாரியாவார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் பேரனர்த்தத்தில் சிக்கிப் 11 பேர் உயிரிழந்து மேல் ஐம்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

