வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபர்

வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில் புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி.ரட்ணாதேவி ரமேஸ் ஓய்வு பெற்ற போது திருமதி இந்துமதி குணரூபன் தற்காலிகமாக அதிபராக கடமையாற்றி வந்தார்.
திருமதி.சத்தியாதேவி நந்தசேன வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை ஆசிரியராக கடமைபுரிந்தார்.
பின்னர் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை பிரதி அதிபராக கடையாற்றியுள்ளார்.
இதன் பின்னர் அதிபராக 2011ஆம் ஆண்டு நியமனம் பெற்று வவுனியா கணேசபுரம் சண்முகாநந்தா வித்தியாலயத்தில் 2018ஆம் ஆண்டு வரை தனது சேவையினையாற்றினார்.
பின்னர் 2018ஆம் ஆண்டு அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு காலப்பகுதி வரை அதிபராக சேவையாற்றி மீண்டும் அதிபர் தரம் 1 இல் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு அதிபராக சேவையாற்றுவதற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியானது வவுனியாவில் காணப்படும் பிரசித்தமான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பல புத்திஜீவிகளை சமூகத்திற்கு வழங்கிவரும் பாடசாலையாகும்.
திருமதி.சத்தியாதேவி நந்தசேன அவர்களின் வருகை பாடசாலை சமூகத்திற்கு மகிழ்வினை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய அதிபரை சந்தித்து தமது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.