இலங்கையில் நாளை ஹஜ்ஜு பெருநாள்

இலங்கையில் நாளை ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் இதனை அறிவித்தது.
இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ‘ஹஜ்’ எனப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் சௌதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் பெருந்திரளாகச் சென்று ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது.
உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இயன்ற ஒவ்வோர் இஸ்லாமியரும் தங்களின் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
மெக்கா என்பது முஹம்மது நபியின் பிறப்பிடமாகவும், புனித நூலான குர்ஆனின் முதல் வெளிப்பாடுகளைப் பெற்ற இடமாகவும் கருதப்படுகிறது.
இஸ்லாத்தின் புனிதமான இடமாகக் கருதப்படும் மஸ்ஜித் அல்-ஹராம், புனித மசூதி அல்லது மெக்காவின் கிராண்ட் மசூதி என அழைக்கப்படுகின்றது. அதன் மையத்தில் கறுப்புத் துணியால் மூடப்பட்ட காபா அமைந்துள்ளது.
