கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை

டேவிட் பீரிஸ் எவியேஷன் விமானம்

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை திங்கட்கிழமை (02) விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த விமானம் நேற்றுப் பி.ப 1.05 அளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமானசேவை முன்னெடுக்கின்றது..

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமானப் பயணம் தொடங்கியிருக்கின்றது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025