மரம் வீழ்ந்து குடியிருப்புகள் சேதம்

மரம் வீழ்ந்து குடியிருப்புகள் சேதம்: நேற்றிரவு (26) வீசிய கடும் காற்றினாலும் அடை மழையாலும் பன்விலை மடுல்கலை நெல்லிமலை தனியார் தோட்டக் குடியிருப்பொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தது.

இதனால், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 22 பாடசாலை மாணவர்களும் அடங்குவர்.பெண்னொருவர் சிறு காயமடைந்துள்ளார்.
தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதோடு கடும் காற்று வீசி வருகிறது.
இரவு பிரதேச மக்கள் நித்திரையில் இருந்த போது பெரும் சத்தத்துடன் மாமரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக தொழிலாளர் குடியிருப்பின் கூரை உடைந்ததோடு சுவர்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு PINTENNA PKANTATION மாற்று தங்குமிட வசதிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பன்விலை ம. நவநீதன்
