சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா

சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா

சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மே மூன்றாம் திகதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025