பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்: பயங்கரவாத நிலைகளை இலக்குவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் பற்றிய விபரங்களை பெண் வீராங்கனைகள் இருவர் ஊடகங்களுக்கு விளக்கியுள்ளனர்.

அவர்கள் பற்றிய விபரங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி, விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர்.

கர்னல் சோபியா குரேஷி :

குஜராத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, 35, இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார்.

1999 ஆம் ஆண்டு உத்தியோகத்தர்கள் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்து இராணுவத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

சோபியாவின் தாத்தாவும் தந்தையும் இராணுவத்தில் இருதவர்கள். சோபியா குரேஷி மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த அதிகாரியை மணந்துள்ள்ளார்.

இதனால் சோபியா முழுமையான ராணுவ குடும்ப பின்னணியை கொண்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ‘எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18’ என்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் 40 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷி ஆவார்.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 18 ஆசியான் பிளஸ் நாடுகள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றன. அனைத்து ASEAN Plus அணிகளிலும் இவர் மட்டுமே பெண் படைத் தளபதி ஆவார்.

கூடுதலாக, அவர் ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் (PKO) பங்கேற்றார். அவர் 2006 ஆம் ஆண்டு கொங்கோவில் ஐ.நா. பணியிலும் பணியாற்றினார்.

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு மற்றொரு விமானப் படை வீராங்கனையும் சிலாகித்துப் பேசப்படுகிறார்.

விங் கமாண்டர் வியோமியா சிங்:

வியோமிகா சிங் சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்று கனவு கண்டார்.

பள்ளி நாட்களில் NCC-யில் சேர்ந்த வியோமிகா பொறியியல் படிப்பை முடித்த பிறகு, இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

டிசம்பர் 18, 2019 அன்று, அவருக்கு பறக்கும் பிரிவில் நிரந்தர ஆணைய அந்தஸ்து வழங்கப்பட்டது. அவருக்கு 2,500 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயண அனுபவம் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உயரமான பகுதிகள் உட்பட மிகவும் சவாலான பகுதிகளில் சேடக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார்.

வடகிழக்கு மற்றும் பிற பகுதிகளில் இயற்கைக் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்காற்றியுள்ளார்.

மூலம்: மாலைமலர்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025