இன்றிரவு இடி மின்னலுடன் மழை

இன்றிரவு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்துடன் பலத்த மழை பெய்யும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (21) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
