1 minute read time
இந்தியப் பிரதமர் இலங்கை வந்தார்: இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
நாளை மறுதினம் பிரதமர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்கிறார். அங்குப் புனித மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடவுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி இறுதியாக 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
கச்சதீவை குத்தகைக்குப் பெற வேண்டும்

