மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை அங்கீகரித்துவிடாதீர்!

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட வேண்டாம் என்று மின்சார பாவனையாளர்கள் சங்கம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சார சபை முன்வைத்துள்ள உத்தேச செலவுகள் எந்த விதத்திலும் பாவனையாளர்களுக்குத் தொடர்புபட்டவை அல்லவென்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.