நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா – வலப்பனை, நில்தண்டாஹின்ன பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை – வில்கமுவ பகுதிக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல் மற்றும் நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அங்கிருந்து உடனடியாக வௌியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
