பொலிஸ் உத்தரவை மீறிச்சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (10) காலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் அல்லைப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சோதனைச் சாவடியைக் கடந்த வானை நிறுத்துமாறு உத்தரவிட்டபோது மீறிச் சென்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்த முயற்சித்ததாகவும் இதில வானைச் செலுத்திச் சென்றவர் காயமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் சேர்க்கப்ப்டட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானில் இருந்த மற்றைய இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
