கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான இப் போராட்டமானது தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 மணிக்கு நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான பதாதைகளை மக்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
தொடர்ந்து நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.








