நிக்கலஸ் மதுரோவும் அவர் மனைவியும் இன்று நியுயோர்க் நீதிமன்றில் ஆஜர்

அமெரிக்கப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவும் அவர் மனைவியும் இன்று நியுயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

கடந்த மூன்றாம் திகதி அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது நிக்கோலஸ் மதுரோ அவர் மனைவி சிலியா ப்ளோரெஸ் ஆகியோர் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத சூழ்ச்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவர் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்