கொக்குவில் மேற்கு , முதலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 133 வது மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வும் மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் திரு சி.கோகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அதிபர் திரு இ.புஸ்பரட்ணம் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக நியூ செல்வா ஹோட்டல் உரிமையாளர் திரு, திருமதி இ. செந்தூரன் அவர்களும் கெளரவ விருந்தினராக செல்வா பலஸ் உரிமையாளர் கலாநிதி திரு. செ.திருமாறன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்


