வெலிமடையில் பாரிய மண்சரிவு: இரண்டு சடலங்கள் மீட்பு

வெலிமடை – கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்