election

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தேர்தலைத் தாமதப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் சில சட்டச் சிக்கல்கள் காணப்படுவதால், அவற்றை நிவர்த்திக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டச் சிக்கல் நிவர்த்திக்கப்பட்டதும் தாமதமின்றித் தேர்தல் நடத்தப்படும் என்று பொது நிர்வாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதியமைச்சர் ருவண் செனரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டச் சிக்கலைத் தீர்த்துத் தந்தால் தேர்தலை நடத்த தயார் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாததால் கடந்த பல வருடங்களாக மாகாண சபைகள் ஆணையாளரின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.