இளையோரின் விழிப்புணர்வு நடை பயணம் நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.
இலங்கை இளைஞர் சம்மேளனத்தின் 19ஆவது தேசிய இளைஞர் மாநாடு, ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரும் சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான பொது விழிப்புணர்வு நடை பயணம் நேற்று (06) நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா தபாலகம் அருகே தொடங்கிய இளைஞர் நடைபயணத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பிராந்திய கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான இளையோர் பங்கேற்றனர்.
நடை பயணத்திற்குப் பிறகு நுவரெலியா நகர மண்டபத்திற்கு வந்த இளைஞர்கள் அங்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.





