காசா மக்களுக்கு ரஃபாவில் முகாம்கள்

கோப்புப் படம்
காசா மக்களுக்கு ரஃபாவில் முகாம்கள் அமைத்து அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தம் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
போரினால் சிதைவடைந்திருக்கும் ரஃபா நகரத்தை மனிதாபிமான நகரமாக மாற்றி அங்கு காசா மக்களைத் தங்கவைக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ரஃபா நகரில் சுமார் ஆறு இலட்சம் பேரைத் தங்க வைக்க முடியும். படிப்படியாக அங்கு சுமார் இருபது இலட்சம் பேரைத் தங்கவைக்க வேண்டும்.
மனிதாபிமான நகரிலிருந்து கடும் சோதனைக்குப் பின்னர் – ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் அல்லர் என்று உறுதிபடுத்திக்கொண்டு – மக்களை உள்ளே அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு எல்லாம் செய்து முடிக்க திரு. கட்ஸ் தீர்மானித்திருப்பதாக பீபீசி செய்தி தெரிவிக்கின்றது.
