2027 முதல் சொத்து வரி

2027 முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வரி முறை, 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஊழியர் மட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சொத்து வரியை அமுல்படுத்த தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், தரவு சேகரிப்பு பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், அவை செப்டம்பர் 2025க்குள் முடிவடையும் என IMF சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வரியை பரிசீலிக்க சொத்துகளின் மதிப்பீடு, வரி கணக்கீடுகளுக்கான டிஜிட்டல் தரவுத் திட்டம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்புகளுக்குத் தேவையான அனைத்து தரவுகளும் 2026 ஆம் ஆண்டு முடிவடையும் முன் தயார் செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சொத்து வரி முறையை 2027இல் முறையாக செயல்படுத்த, ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என IMF வலியுறுத்தியுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025