ஜப்பானில் பொய்த்துப்போன மங்கா ஆரூடம்

ஜப்பானில் பொய்த்துப்போன மங்கா ஆரூடம் குறித்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சரியான நேற்று 2025 ஜூலை ஐந்தாம் திகதி ஜப்பான் அழிந்துவிடும். கடல் இரண்டாகப் பிளக்கும், கடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஆசியாவையே சுனாமி ஓர் ஆட்டு ஆட்டுவிக்கும் என்று ஜப்பானிய் புதிய பாபா வங்கா கூறியிருந்தார்.
மங்கா எனும் சித்திரக் கதை ஆசிரியையான றியோ டட்சுகி (70) கடந்த காலத்தில் நடந்த ஆரூடம் எல்லாம் பலித்ததே! ஜூலை ஐந்தில் என்ன நடக்குமோ என்று மக்கள் நடு நடுங்கிக்கொண்டிருந்தனர்.
விமானப் பயணங்கள், சுற்றுலாக்கள் எல்லாம் இரத்துச்செய்யப்பட்டன. பேரிடர் மீட்புப் பணிகளுக்குத் தயாராக இருந்தது ஜப்பான். ஆனால், சுமாமி வரும் என்று நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்ல முடியாது என்றார்கள் அதிகாரிகள்.
ஜப்பானில் பொய்த்துப்போன மங்கா ஆரூடம் குறித்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம். மங்காவுக்கு மட்டும் இது திண்டாட்டம் என்று சொல்ல முடியாது. தீர்க்கதரிகள் அனைவருக்குமே ஏமாற்றம்!
கடந்த 2021 ஆம் ஆண்டு றியோ டட்சுகி வெளியிட்ட சித்திரக் கதை நூலில் எதிர்காலத்தைக் கணித்திருக்கிறார். பெரும்பாலும் ஜப்பான் பேரழிவைச் சந்திக்கும் என்பது முக்கிய கணிப்பு.
ஜீவிதன்
